• Image

வரன்கள் பதிவு.

சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த இணையதளத்தில் திருமண பதிவினை மேற்கொள்வோர் உறுப்பினராக வேண்டிய அவசியம் இல்லை.
எனவே,உறுப்பினர் ஆகும் பக்கத்தினை திருமண பதிவு செய்வோர் பயன்படுத்த வேண்டாம்.
உறுப்பினர் பதிவு சென்னை வாழ் மதுரை,விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட உறவுகளுக்கு மட்டுமே. இவர்களும் சென்னையில் வசித்தால் மட்டுமே உறுப்பினராவது கட்டாயம்.
வெளியூர்களில் வசிக்கும் மேற்குறிப்பிட்ட மாவட்ட உறவுகளோ,அல்லது பிற மாவட்ட உறவுகளோ,விரும்பினால் மட்டுமே உறுப்பினர் பதிவினை மேற்கொள்ள வேண்டும். ஆண்டு உறுப்பினர் நன்கொடை 500 மட்டும். வாழ் நாள் உறுப்பினர் நன்கொடை 5000 மட்டும்.
கட்டணமில்லா வரன்கள் பதிவு 14.07.2019 உடன் முடிவடைந்தது. இனி இத்தளத்தில் பதிவு செய்யும் வரன்கள் 500/-மட்டும் நன்கொடையாக நமது அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும்.
ஏற்கனவே நமது அலுவலகத்திலோ, அல்லது மணமாலை நிகழ்வுகளின் போதோ பதிவு செய்த வரன்கள் அனைவரும் இந்த இணையதள வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம். அவ்வாறு இந்த தளத்தினை உபயோகிக்கும் அனைவரும் நன்கொடை செலுத்தினால் மட்டுமே பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.
இணைய தளத்தில் பதிவு செய்தோர் உள்நுழைந்து பார்வை இடும் போது திருமண பதிவு பக்கத்தில் நகர்ந்து கொண்டுள்ள வரன்கள் புகைப்படங்கள் மேல் அழுத்தினால் ஒவ்வொரு வரனாக .பார்வையிடலாம்.அல்லது அதன் கீழ் உள்ள LOAD MORE என்ற பகுதியை சொடுக்கினால் அனைத்து வரன்களையும் மொத்தமாகவோ,பக்க வாரியாகவோ பார்க்கலாம்.அதிலேயே,தேடு பொரியும் உள்ளது.அந்த வசதியையும் பார்வையிடலாம்.
இந்த இணைய தளத்தில் புகைப்படம் மறைப்பது குறித்தான வசதி உள்ளது.
மேலும்,தொடர்பு எண்கள், முகவரி, மறைக்கப்பட்டுள்ளது.
ஜாதக பொருத்தம்சரியாக அமைந்து பிற விபரங்களும் பொருத்தமாக இருப்பின் நீங்கள் எங்களை தொடர்புகொள்ள வேண்டும்.நீங்கள் குறிப்பிடும் குடும்பத்தாருடன் நாங்கள் தொடர்பு கொண்டு,அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே,உங்களுக்கு சம்பந்தப்பட்ட வரன் களின்தொடர்பு உங்களுக்கு கிடைக்கும்.சில அசம்பாவித நிகழ்வுகள் எங்களின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் இணைய தள வசதியில் சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இணைய தள வசதி குறித்து உங்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம்... நன்றி....

Leave Your Comments